காங்கிரஸ் கட்சி சார்பில் “வாக்கைக் காப்போம் – நாட்டை காப்போம்” நிகழ்வு
திருச்சி, அக்.26 “வாக்கைக் காப்போம் – நாட்டை காப்போம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் மல்லு ரவி MP மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் ஆகியோர் கடந்த 2018 ம் ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்ற வாக்கு திருட்டு பற்றி விவரித்தனர்.
நிகழ்வில் மத்திய மண்டல பொறுப்பாளர் எஸ். டி. நெடுஞ்செழியன், “வாக்கைக் காப்போம் – நாட்டை காப்போம்” திருச்சி மண்டல பொறுப்பாளர் டாக்டர் மணிரத்தினம், மாவட்ட தலைவர்கள் எல். ரெக்ஸ், கே ஆர் ஆர் ராஜலிங்கம், தொட்டியம் சரவணன், பெனட் அந்தோணிராஜ், மணிகண்டன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.