விளை நிலம் காப்போம் இயக்க விழிப்புணர்வு கூட்டம்

0 23
Stalin trichy visit

திருச்சி, அக்.27  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி  உத்தரவுபடி கூத்தூர் கிராமத்தில் உள்ள கிராம சேவை மையத்தில் விளை நிலம் காப்போம் இயக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் இயற்கை வேளாண்மை குறித்தும், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்தும் உரை ஆற்றினார்.
இந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் நடப்பு ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் பயன்கள் குறித்தும் உரை ஆற்றினார்.
மேலும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தரமான விதை தேர்வு பற்றியும் நெல் நேரடி விதைப்பு முறை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். முன்னோடி விவசாயிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி  நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.