முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு த.வெ.க. சார்பில் அன்னதானம் வழங்கல்

0 20
Stalin trichy visit

திருச்சி, அக்.30  முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா – தவெக நிர்வாகி தர்கா சௌகத் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ நவல்பட்டு விஜி:-

திருச்சி சிந்தாமணி பகுதி தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தேசிய தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான முத்துராமலிங்க தேவர்  119 ஆவது குருபூஜை விழா மற்றும் ஏழாம் ஆண்டு அன்னதான விழா கிழக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் தர்கா சௌகத் தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே இன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக திருவெறும்பூர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நாவல்பட்டு விஜி கலந்துகொண்டு தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அதனைத் தொடர்ந்து 3000 பேருக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிரஞ்சீவி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்நாதன், பூபதி திருவெறும்பூர் பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மூர்த்தி, நாகேந்திரன், கணேஷ், சந்துரு, மலைக்கோட்டை பகுதி கணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.