திருச்சி காவேரி மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யா கணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழா

0 15
Stalin trichy visit

திருச்சி, நவ. 23 திருச்சி காவேரி மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யா கணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது:-

திருச்சி உறையூர் காவிரி மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவித்யா கணபதி, ஸ்ரீ வித்யா லட்சுமி, ஸ்ரீ வித்யா சரஸ்வதி, ஸ்ரீ வேதா தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ மஹா விஷ்ணு, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு அஷ்டப்பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 12ஆம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜையுடன் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது அதனை தொடர்ந்து 21 ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அனைத்து சுவாமிகளுக்கும் யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கால யாக பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு காலை 8 50 மணி அளவில் ஸ்ரீ வித்யா கணபதி, மற்றும் ஸ்ரீ நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் கோவில் தலைவர் கோபால், செயலாளர் ராமநாதன், பொருளாளர் சாரணநாதன் மற்றும் நிர்வாகிகள் நீலகண்டன், சந்திரசேகர், ராஜகோபால், நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.