கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் மாடு பூட்டி நூதன போராட்டம்

0 15
Stalin trichy visit

திருச்சி, நவ. 26 கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மாடு பூட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி,  நேற்று (நவ.25)  திருச்சியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஐம்பது விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், பச்சை துண்டு அணிந்து, கோரிக்கை பதாகைகளை ஏந்தி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் முதல்வர் விஜய் அவர்கள் தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

எனவே 2021 முதல் 2026 வரையிலான அனைத்து வகையான விவசாயிகள் கூட்டுறவு கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் பொது விவசாயிகள் சாலையில் இரண்டு வெள்ளை மாடுகளை பூட்டி, ஏர் கலப்பையுடன் சாலையிலேயே நின்று நூதன போராட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

போராட்டத்தின் முடிவில், விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டுறவு சங்க நிர்வாகியிடம் மனு அளித்தனர். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.