டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனையில் “ஐரா” – கருத்தரிப்பு சிகிச்சை மையம் தொடக்கம்
திருச்சி,நவ.26 திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவ
மனையில் குழந்தையின்மை – க்கான “ஐரா” சிறப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.
1939 ஆம் ஆண்டு திருச்சியில் துவங்கப்பட்ட டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சிகிச்சையை வழங்குவதில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.
புற்றுநோய்,எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை,மகப்பேறு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த மருத்துவத்தை அளித்து வரும் டாக்டர் ஜி. விசுவநாதன் மருத்துவமனை மாம்பழச்
சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் “ஐரா” குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று துவங்கி உள்ளது.
“ஐரா” மகளிர் நலம்,மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை மையத்தின்
( AIRA IVF and Women centre ) செயல்பாடுகள் குறித்து டாக்டர் ஜி.விஸ்வனாதன் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கோவிந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், இதில் : 1939ம் ஆண்டு துவங்கப்பட்ட டாக்டர் ஜி விஸ்வநாதன் மருத்துவமனை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சிறந்த சிகிச்சையை குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தையின்மை சிகிச்சைக்காக தம்பதிகள் லட்சக்கணக்கில் செலவு செய்யும் இக்கட்டான சூழல் இருந்து வருகிறது.
குறிப்பாக குழந்தையின்மை சிகிச்சை இன்றைய போட்டி நிறைந்த உலகில் வியாபாரமாகவே மாறிவிட்டது.
மாம்பழசாலையில் உள்ள டாக்டர் ஜி விஸ்வநாதன் மருத்துவ மனையில் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டதின் நோக்கம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் நிறைவான சிகிச்சையை பெற வேண்டும் என்பதற்கே.
முறையாக பதிவு செய்யப்பட்டு மருத்துவத் துறையில் அனைத்து சான்றுகளையும் பெற்று ஐரா – குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று துவங்கி உள்ளோம்.
மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை நிபுணர் சித்தாரா மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் புவனேஸ்வரி ஆகியோர் அடங்கிய
மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குழந்தையின்மைக்கு தீர்வு காண உள்ளனர்.
ஐரா – மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர் சித்தாரா செய்தியாளர்களிடம் பேசுகையில் :
குழந்தையின்மைககான சிகிச்சைக்கு வரும் தம்பதியர்களை முதலில் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து இயற்கையாக அவர்களுக்கு குழந்தை உருவாகும் சூழல் உள்ளதா என்று ஆய்வு செய்வோம் அதற்கு பின்னர் பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே கருத்தரிப்பு சிகிச்சை முதல் டெஸ்ட் டியூப் பேபி வரையிலான சிகிச்சையை அளிப்போம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் தம்பதியர்கள் நிறைய பணம் செலவழிக்கும் சூழல் உள்ளது – ஆனால் எங்களின் நோக்கம் குறைந்த விலையில் முழுமையான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதே.
இந்த மையத்தில் பெண்களுக்கான விரிவான மகளிர் நல மருத்துவ சேவைகள், மகப்பேறு சேவைகள்,நவீன கருத்தரிப்பு சிகிச்சைகள், கருமுட்டை வளர்ச்சியை தூண்டும் சிகிச்சை, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை, விந்தணுவை நேரடியாக கருமுட்டைக்குள் செலுத்தும் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சையும் அளிக்கப்படும்.