காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

0 260
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் லியோஅமல்ராஜ். இவருடைய மனைவி பீட்டர் பவுலினா(வயது 24). இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் பாலக்கரை ஆட்டுக்காரத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பீட்டர் பவுலினா உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் சம்பவத்தன்று காலை அவரை உறவினர் வீட்டில் காணாததால் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தனர்.

பின்னர் பாலக்கரை ஆட்டுக்காரத்தெருவில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு பவுலினா தூக்கில் தொங்கினார். இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.