திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் அமைச்சர் கே.என் நேரு ஆய்வு!

0 541
Stalin trichy visit

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மழையினால் திருச்சி வயலூர் சாலையில் உள்ள ஆதிநகரின் வழியாகச் செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றில் நீர்செல்லும் அளவினையும், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தினையும் பார்வையிட்டு, ஆற்றின் கரைகளில் உள்ள செடிகளை அகற்றி, தூர்வாரிடவும், உயரம் குறைவாகவும் பழுதடைந்தும் உள்ள ஆற்றின் குறுக்குப் பாலத்திற்குப் பதிலாக புதிதாக உயர்மட்டப் பாலம் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சு‌ .சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன் ,மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.