நடந்து சென்ற பட்டதாரி பெண் கீழே விழுந்து உயிரிழப்பு

0 403
Stalin trichy visit

.
திருச்சி, நவ. 28 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அனுமார் கோயில் தெருவில் வீட்டின் பின்புறம் நடந்து சென்ற பெண் திடீரென வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் கிருத்திகா (41). இவருக்கு இன்னும் திருமணமாகாமல் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். EEE பொறியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு கடந்த 2004 ம் ஆண்டு முதல் சற்று நல மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தவர் எதிர்பாராதமாக திடீரென வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.இதனைக் கண்ட அவரது பெற்றோர்கள் கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.