கலைஞர் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

0 371
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சங்கேந்தி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு  திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சங்கேந்தி ஊராட்சியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் கலைஞர் மு.கருணாநிதியின்  101 வது பிறந்தநாள் விழா சங்கேந்தி திமுக கிளைச்செயலாளர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்
திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி கழக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்வில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ராதா,முன்னால் காவல்துறை அதிகாரி செல்வராஜ் மற்றும கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.