திராவிட பொங்கலை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி
திருச்சி,ஜன.12 திருச்சி தெற்கு மாவட்டத்தில் திராவிட பொங்கல் சமூக நீதி காண திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக பூலாங்குடி பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் கபாடி போட்டியைத் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் தலைமை செயற்குழுஉறுப்பினர் .வண்ணை அரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 15,000 இரண்டாம் பரிசு பத்தாயிரம் மூன்றாம் பரிசு ரூ 5000 வழங்கப்பட்டது.
: