காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பிரம்மாண்ட பேரணி

0 187
Stalin trichy visit

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை தலைமையில் மாபெரும் பிரம்மாண்ட பேரணி விழா நடைபெற்றது

தேசிய தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமையில் மாபெரும் பிரம்மாண்ட பாதயாத்திரையை கொடியேற்றத்துடன் லால்குடியிலிருந்து தொடங்கி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்கிருந்து மண்ணச்சநல்லூர் வரை நடை பயணம் மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு கிறிஸ்டோபர் திலக், இளைஞர் மாநில காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். நிகழ்வில் லால்குடி வட்டாரத் தலைவர் சுப்பிரமணி, மாவட்டத் துணைத் தலைவர் தொட்டியம் சத்தியமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகனாம்பாள், முசிறி வட்டார தலைவர் நல்லேந்தன், எஸ்.சி.எஸ்.டி பிரிவு கே.பெரியசாமி, புள்ளம்பாடி வட்டாரத் தலைவர்கள் பிரபு, இளங்கோவன், மற்றும் உப்பிலியபுரம், தா. பேட்டை, மண்ணச்சநல்லூர் தலைவர்கள் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடைபயணத்தை மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.