துவாக்குடி அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய அரசின் திருநர் சட்ட திருத்திற்கு எதிர்ப்பு பதாகையுடன் பட்டம் பெற்ற மாணவர்

0 213
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27  திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் பட்டம் பெற்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
இதற்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய மாணவர் சங்க அமைப்பை சேர்ந்த வைர வளவன் என்ற மாணவன், தான் பட்டம் பெறும்போது திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ( REJCT TRANS BILL 2026! STOP IDENTITY POLICING) வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்திய படி பட்டம் பெற்றார்.

மேலும் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த மகிழ்ச்சியில், பட்டமளிப்பு விழா மேடையில், அமர்ந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருக்கும் கைகுலுக்கினார்.
இந்த சம்பவத்தால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.