கணவன், மாமானார், மாமியார் கொடுமையால் இளம்பெண் தற்கொலை

0 268
Stalin trichy visit

கணவர் ,மாமனார், மாமியார் கொடுமையால் இளம்பெண் தற்கொலை.

திருச்சி, செப் 30 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மேல முதலியார் தெருவை சேர்ந்த சாம்பசிவம் என்பவரின் மகள் ஜெய் கார்த்திகாய்னி(32) என்பவருக்கும், லால்குடி டால்மியா பகுதியை சேர்ந்த நவநீதன்(38) என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடகாலமாக இருந்தே மாமியார், மாமனார்,மற்றும் கணவர் ஆகிய 3 பேரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த காணப்பட்ட ஜெய் கார்த்திகாயினி தனது அம்மா நிரஞ்சனா தேவியிடம் (63) கடந்த செப்டம்பர் 29 ம் தேதி சொல்லி அழுதுகொண்டே செல்போனில் தகவல் சொல்லியுள்ளார் .
இதையடுத்து 27 ம் தேதி அன்று ஜெய் கார்த்திகாயினின் தந்தை சாம்பசிவம் லால்குடி உள்ள மகள் வீட்டிற்கு சென்று மகள் மற்றும் பேர குழந்தையை மண்ணச்சநல்லூருக்கு அழைத்து வந்துவிட்டார்.
அதனைத்தொடர்ந்து மாமனார் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகளை அம்மா, அப்பாவிடம் சொல்லி புலம்பி உள்ளார். பின்னர் மகளுக்கு ஆறுதல் கூறி இரவு உணவு அருந்திவிட்டு தனி தனி அறையில் உறங்க சென்றுவிட்டனர்.
இந்நிலையில் மறுநாள் அதிகாலையில் வாக்கிங் செல்ல எழுந்த சாம்பசிவம் வீட்டின் ஹால் பகுதியிக்கு வந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து தன் மனைவி நிரஞ்சனா தேவி எழுப்பினார். அப்போது இருவரும் கதறி அழுதபடி இருந்ததை கண்டு வீட்டின் அருகே இருந்தவர்கள் ஜெய் கார்த்திகாயினியை உடனடியாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தன்னுடைய மகள் இறப்புக்கு காரணமான ஜெய் கார்த்திகாயினின் மாமனார், மாமியார் மற்றும் கணவரை ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த பெண்ணிண் தாயார் நிரஞ்சனா தேவி என்பவர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.