மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் ஆடி மாத பால்குட விழா

0 301
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  மணப்பாறை அருகே மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் ஆடி மாத பால்குட விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே புகழ்பெற்ற மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு திருவிழாவின் தொடக்கமாக இன்று பால்குட விழா நடைபெற்றது. அக்கதீஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின் தாரை தப்பட்டை முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பால்குடமெடுத்துக் கொண்டு ஆண்டவர் கோவிலை வந்தடைந்ததும் மான்பூண்டி நல்லாண்டவருக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக குதிரை நாட்டிமாடிக் கொண்டு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Leave A Reply

Your email address will not be published.