லாரி மீது மோதி விபத்து: இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் காயங்களுடன் மீட்பு.

0 225
Stalin trichy visit

திருச்சி, ஆக.20  திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு வெள்ளை மணி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்ற லாரி எரிபொருள் இல்லாமல்
திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புள்ளம்பாடி அருகே நின்று கொண்டிருந்தது.அப்போது சுதாகர் (45) என்ற ஓட்டுநர் பின்னால் ஓட்டி வந்த லாரி நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது லாரியின் டிரைவர் சுதாகர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சிறப்பு நிலைய அலுவலர் பாரதி தலைமையில் வீரர்கள்கள் மணிவண்ணன், ரமேஷ் குமார், வெங்கடேசன், சுரேந்தர், சரண்குமார் ஆகியோர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரை காயங்களுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.