முசிறியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்

0 228
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 19  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 23.3.2024 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் முசிறி வாசன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், குளித்தலை ஆகிய தொகுதிகளில் உள்ள திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சியினர் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.