விவசாயிக்கு டிராக்டர் இயந்திரம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

0 225
Stalin trichy visit

திருச்சி, மே 9  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள விவசாயிக்கு டிராக்டர் இயந்திரம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றம் அறக்கட்டளை மூலம் இலவசமாக டிராக்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பனுக்கு டிராக்டர் இயந்திரம் வழங்கி பேசியதாவது…

இந்த மாற்றம் என்ற சேவை மூலம் உங்களுக்கு சேவையை செய்ய கடவுள் என்னை அனுப்பி இருக்கிறார். நான் ஒரு வேலைக்காரனாக வந்து உங்களுக்கு சேவை செய்வது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் போதும். எல்லா ஊர்களுக்கும் ஒரு டிராக்டர் கொடுத்து வருகிறேன். அந்த வகையில், உங்கள் கிராமத்துக்கு ஒரு டிராக்டரை விவசாயி மாரியப்பனுக்கு வழங்கி உள்ளேன். திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த டிராக்டரை பயன்படுத்தி விவசாய பணியில் ஈடுபட வேண்டும். நாம் விவசாயிகளுக்கு சோறு போட்டால், அவர்கள் நமக்கு சோறு போடுவார்கள்
என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாற்றம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.