வாழைத்தண்டுப் பொறி மற்றும் வாழைக்கன்று நேர்த்தி பற்றி பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 15
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டாரத்தில், நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் செ. ஆதித்யன், பெ. அன்பழகன், செ. தேவஅபிஷேக் , க. தினேஷ்,
வி. மதுபாலன், செ. நிரஞ்சன், சு. ராஜேந்திர பிரசாத், அ. விஜயசாரதி, ரா. விஜேஷ், அ. விமல்ராஜ் மற்றும் கு. விஷ்ணு பிரசாத் ஆகியோர் முதல்வர் முனைவர். வெங்கடபிரபு  வழிகாட்டுதலிலும், பாட ஆசிரியர் ம. மோகன்ராஜ்  மேற்பார்வையில் ஓருங்கிணைப்பாளர்களான முனைவர். கண்ணன் மற்றும்  நந்தகுமார் ஆகியோர் ஆலோசனையிலும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்( RAWE) கிழ் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சிறுமயங்குடி கிராமத்து விவசாயிகளுக்கு வாழைத்தண்டுப் பொறி மற்றும் வாழைக்கன்று நேர்த்தி முறையை களவிளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இக்களவிளக்க செயல்முறை விவசாயி ஸ்ரீநிவாசன்  வாழைத் தோட்டத்தில் மற்ற விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மாணவர்கள் வாழைத் தண்டுப் பொறி, தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் வாழைக்கன்று நேர்த்தி ஆகியவற்றை செய்து காட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளித்ததோடு அவர்களின் சந்தேகங்களுக்கும் தீர்வு அளித்தனர் .

Leave A Reply

Your email address will not be published.