திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

0 318
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு, திருச்சி விமான நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு.

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நாமக்கல் நகர கழக செயலாளர் கே.பி.பி பாஸ்கர் அவர்களின் மனைவி உமா பாஸ்கர் நேற்று மாலை இயற்கை எய்தினார்.

அம்மையாரது இறுதி ஊர்வலம் இன்று காலை 10:30 மணியளவில் மோகனூர் ரோடு, சுவாமி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

இந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே .பழனிச்சாமி இன்று காலை திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அவருக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழகம், புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் எம்பி குமார், வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, காலை 9 மணிக்கு மறைந்த  உமா பாஸ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.