ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

0 160
Stalin trichy visit

திருச்சி ஆக. 19 திருச்சியில் அதிமுகவினர் பிளக்ஸ் அகற்றம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகை – காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்

தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவினர் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபடுகிறார். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ராஜாகோபுரம் அருகே 25 ஆம் தேதி பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். அதற்காக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு அவரை வரவேற்றும் வாழ்த்தியும் அதிமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

காவல்துறையினர் அனுமதி மறுத்ததன் காரணமாக அவைகள் அகற்றப்பட்டுள்ளன
இதனைக் கண்டிக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலருமான பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் ஶ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்ருமான பரஞ்சோதி, திருச்சி மாவட்டத்தில் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பரப்பரை ஈடுபட உள்ளார் அதில் விரைவாக ஸ்ரீரங்கத்தில் 25ஆம் தேதி பரப்புரையில் ல் ஈடுபட உள்ளார். இதனையொட்டி ஏற்பாடு செய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மக்கள் திரண்டு வருவதால் இதனை கண்ட ஆளும் கட்சியினர் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு சில இடங்களில் இடையூறுகளை ஏற்படுகின்றனர். அதனை களைய வேண்டும் பொது செயலாளர் சுற்றுப்பயணம் சிறப்பாக நடத்த வேண்டும் அதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடத்தில் வைத்தோம். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர் உரிய பாதுகாப்பு வழங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கான கோர்ட் ஆர்டரை சுட்டிக்காட்டினார்கள். அதனை நாங்கள் மதிக்க கூடியவர்கள் . கோர்ட் என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.