மணப்பாறையில் ஏஐசிசிடியு ஆட்டோ சங்க பெயர் பலகை, கொடிகம்பம் திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் AICCTU ஆட்டோ சங்கம் கடந்த 3 ஆண்டுகளாக கொடிக் கம்பம் மற்றும் பெயர்ப்பலகை வைத்து ஆட்டோ நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகளால் கொடி கம்பம் மற்றும் பெயர்ப்பலகையை இரவோடு இரவாக திருடிக் சென்றுள்ளனர்.
உடனடியாக நிர்வாகிகள் இடத்தினை பார்வையிட்டனர். பின்னர் ஆட்டோ சங்க செயலாளர் தோழர் கமல் (எ) முனுசாமி தலைமையில் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
CPIML மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார், CPIML நகரச் செயலாளர் பாலு, AICCTU மாநில செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் இரா.இரவி , மற்றும் ஆட்டோசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காவல் துறை நடவடிக்கை எடுக்க கோரி வருகின்ற 04/10/24 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மணப்பாறை பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.