மோடிஜி கிரிக்கெட் கிளப் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திருச்சி, ஏப்.16 விழா திருச்சி மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் முன்னிட்டு அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 12 சிந்தாமணி பகுதியில் மோடி ஜி கிரிக்கெட் கிளப் சார்பாக இளைஞர்களுக்கான தலைவர் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்கிற பட்டத்தை பெற்றுக் கொடுத்தவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 135 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு சிந்தாமணி பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் செய்த தியாகங்களை திருச்சி மாவட்டம் மோடி ஜி கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப்பாளர் நவநீத கிருஷ்ணன் எடுத்துக்கூறி டாக்டர் அம்பேத்கரை போற்றும் விதமாக அவரது படத்திற்கு மலர் தூவி , விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் சிறுவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.