துறையூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

0 243
Stalin trichy visit

திருச்சி, அக். 4  திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
துறையூர் அருகே உள்ள புலிவலத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியானது துறையூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி திருச்சி சாலை வழியாக முசிறி பிரிவு சாலை ரவுண்டான வரை நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் போதையை ஒழிப்போம் மறுவாழ்வு பெறுவோம், போதையின் பாதை நாட்டுக்கு கேடு, போதையில் வாகனத்தை ஓட்டாதே விபத்தை ஏற்படுத்தி உயிரை இழக்காதே, மது அருந்தி குடும்பத்தை இழக்காதே, உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.