விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்
திருச்சி, செப். 12 திருச்சியில் விபச்சார தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக அண்மையில் எழுந்த புகாரில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் தங்களிடம் மாமூல் வாங்கிய ஏழு காவல்துறையினர் பெயர்களை எழுதி வைத்திருந்தனர். இதில் சம்மந்தப்பட்ட காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.