அதிமுக பாஜக கூட்டணி விரும்பாததால் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார் : திருநாவுக்கரசர் பேட்டி

0 222
Stalin trichy visit

திருச்சி ஜீலை 21 தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற காமராசர் பிறந்த நாள் விழா, குமரிஅனந்தன் நினைவேந்தல், மற்றும் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணியின் தலைவர் புத்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கலை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

நிகழ்வின் காமராஜர், குமரிஆனந்தன், சிவாஜிகணேசன் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :-

அதிமுக பாஜக கூட்டணி விரும்பாததால் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.  எங்கள் கூட்டணிக்கு தான் வந்துள்ளார்.

அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூற முடியாது அது அதிமுக நிர்வாகிகளிடம் தான் தான் கேட்க வேண்டும். பிற மாநிலங்களில் பிஜேபி எல்லா கட்சிகளையும் உடைத்துள்ளது என்ற அவருடைய கருத்து சரியானதுதான்.

அகில இந்திய அளவிலும் சரி தமிழகத்திலும் கூட்டணி ஆட்சிதான் தான் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வித்தியாசமான சூழ்நிலை இதுவரை கூட்டணி ஆட்சி வந்ததில்லை.

காங்கிரசுக்கு ஆட்சியில் இடம் வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது. நிபந்தனையும் கிடையாது.

கூட்டணி கட்சியில சிலர் முன் வைக்கின்றனர். இருப்பது 234 இடங்கள்தான் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப ஒன்று இரண்டு கூடலாம் குறையலாம்.

காங்கிரஸ் இத்தனை சீட்டுகள் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை.

திருமாவளவன் திமுகவிற்கு விழும் நான்கு ஓட்டில் ஒரு ஓட்டு தன்னுடைய ஓட்டு என்று தெரிவிக்கிறார் என்ற கேள்விக்கு?

ஒவ்வொரு கட்சியும் தாங்கள் பலமாக இருக்கிறேன் என்றுதான் கூறுவார்கள். நான் கூட சொல்லலாம் நாளோட்டில் மூன்று ஓட்டு காங்கிரஸ் ஓட்டு விழுவோம் என்று…

மதுரை விஜய் மாநாட்டிற்கு ராகுல் வருவது குறித்த கேள்விக்கு?

கதை கற்பனைச் எல்லாம் எல்லாம் நான் பதில் கூற முடியாது என கூறினார்.

சிவா கூறிய கருத்திருக்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன், அறிக்கை தொடர்பாகவும் கண்டித்து உள்ளேன். சிவா இது குறித்து விளக்கம் கொடுத்துவிட்டார். காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்துகையும் இது குறித்து கருத்து விட்டார் அந்த பிரச்சனை முடிந்து விட்டது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.