தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 64
Stalin trichy visit

திருச்சி, ஜன.24  முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், முசிறி சார் ஆட்சியர் மற்றும் பலர் பங்கேற்பு,

இந்தியா மேப் அமைப்பில் மாணவ, மாணவிகள் நின்று உறுதிமொழி..

1330 திருக்குறளை வெற்றிலையில் எழுதி VOTE 100% என அமைத்து வாக்காளர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் கோல போட்டிகளை பார்வையிட்டு கோலப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சால்வைகள் வழங்கி பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்..

மாவட்ட ஆட்சியர் பேசுகையில் சட்டப்பேரவைத் தேர்தல் 17 வது தேர்தலாகும்,

1930ல் வந்த தேர்தல் முதல் தேர்தல் எலக்சன் கமிஷன் நடத்தது,1947 வருடம் 40 கோடி மக்கள் இருந்தார்கள், அதாவது உலகத்திலேயே மக்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு இந்தியா, ஜனநாயக அடிப்படையில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஓட்டுரிமை கொடுக்கப்பட்டுள்ள நாடு இந்தியா எடுக்கும் முடிவு தான் தேர்தல் நடத்தைகளில் கொண்டு வரப்பட்டு வருகிறது,சர்வாதிகாரம் இல்லாமல் தேர்தல் நடத்தப்படுகிறது, தேர்தலில் போட்டியிடுபவர்கள் கூட தோல்வியுற்றால் அதை ஒத்துக் கொள்ளக்கூடிய நாடாக இந்தியா உள்ளது, எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களின் முதல் ஓட்டினை தவறாது பதிவு செய்ய நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க
வேண்டும், என் வாக்கு என் உரிமை என்பதை மனதில் கொண்டு தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டி என பேசினார்,

விழாவில் துணை ஆட்சியர் பாரூக், முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, கல்லூரி தாளாளர் பெரியசாமி,
முதல்வர் அசோகன் மற்றும் வட்டாட்சியர் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கிருஷ்ணகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்..

இந்தியா மேப் அமைப்பில் மாணவ மாணவிகள் நின்று வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்,

1330 திருக்குறள்கள் அடங்கிய வெற்றிலைகளில்100% எனவும், இந்திய வரைபட வடிவத்தில் மாணவ, மாணவிகள் நின்று தேசிய வாக்காளர் தின உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.