போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.11 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள இ.ஆர். பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணவர்வு பேரணி, காவல்துறையினரின் மோட்டார் வாகன பேரணி மற்றும் மாணவ, மாணவியர்களின் தொடர் ஜோதி ஓட்டம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடிசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் அன்பாகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.