மணப்பாறையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் போலீஸ் நிலையத்தில் ஆஜர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை 1 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்லம்மாள். வீட்டில் இருந்த அவரை 10 பேர் கடத்திச் சென்றதாக அவரது மகன் மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், நகர்மன்ற உறுப்பினர் எத்திராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்லம்மாள் கடத்தப்படவில்லை, சுயவிருப்பத்தின் பேரில் சென்றதாக வீடியோ வெளியானது. இந்நிலையில் தான் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட செல்லம்மாள் மது நீதிமன்ற உத்தரவின்படி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன்னுடைய சுயவிருப்பத்தின் பேரில் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
