தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

0 425
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி பேருந்து நிறுத்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு் விற்றவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

திருப்பைஞ்சீலி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த மண்ணசநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பைஞ்சீலி பேருந்து நிறுத்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்த  பாலசுப்பிரமணியன் (46) என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் ரூ. 2520 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.