புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை தொடக்கம்
திருச்சி, மார்ச் 11 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் ரூ.86 லட்சம் மதிப்பில் தார்சாலை ,பேவர் ப்ளாக் சாலை,
பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமிபூஜையை சட்டமன்ற உறுப்பினர்சவுந்தரபாண்டியன் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.86 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை ,பேவர் ப்ளாக் சாலை , வடிகால்கள், பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமிபூஜை நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் பூமிபூஜை பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ரசியா ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபிரகாசம் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை கண்ணன்,திமுக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.