திருச்சியில் புத்தக திருவிழா : அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்

0 87
Stalin trichy visit

திருச்சி, பிப்.14 திருச்சி செயிண்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி புத்தக திருவிழா கண்காட்சியை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், மண்டல தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.