திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் செவிலியர் போல் நடித்து குழந்தை திருட்டு
திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வீர மச்சான் பட்டி ஊராட்சியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது இந்நிலையில் இன்று அதிகாலை அந்த குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்த மர்மப் பெண் ஒருவர் அந்த ஆண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார் வெகு நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராததால் அந்த பெண் மற்றும் உறவினர்கள் இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒன்றில் அந்த குழந்தையை அந்த மர்ம பெண் தூக்கிக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது இந்நிகழ்வுஅரச மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதுபோன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை வேலைகளில் அனைத்து வார்டுகளிலும் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.