ராமர் படம் எரிப்பு: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக்.3 ராமர் உருவ பொம்மை எரித்த சம்பவத்தை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் அருகே குண்டூர் அயன்புத்தூர் கிராமத்தில் 5ஆம் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராமர் உருவப்படத்தை எரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாகவும், ராமபிரானை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் குண்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராமரின் படத்தை எரித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மதஉணர்வை தூண்டும் திமுக அரசையும், இந்து விரோத அமைப்புகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஸ்வ இந்து பரிசத், இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அளித்த பேட்டியில்,
குண்டூர் அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ராமர் படத்தை எடுத்து அவமரியாதை செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இவருக்கு விசுவ இந்து பரிசத் அமைப்பு சார்ந்தவர்கள் புகார் அளிக்கும் வரை காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்கில் செயல்பட்டுள்ளது. அதேபோல் புகார் கொடுத்த பிறகு அவசரமாக ஒரு நபரை மட்டுமே கைது செய்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழா ஒன்றில் வைரமுத்து ராமரை அவமரியாதையாக பேசினார். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்கின்றார். அதேபோல் வி.சி.க வின் நிர்வாகி வன்னி அரசு ராமபிரானை ஆணவ படுகொலைகாரர் என விமர்சித்துள்ளார். இவர்களுக்கெல்லாம் ராமரைபற்றி பேச தகுதி இல்லை. இவர்கள் மீது விஸ்வந்த் பரிஷத் புகார் அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே போல தான்குண்டூர் அயன்புதூர் கிராமத்தில் நடந்த செயலுக்கு காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து தற்பொழுது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வார காலம் காவல்துறைக்கு அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் அவர்கள் ராமன் படத்தை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இல்லாவிட்டால் தமிழக மட்டுமல்லாது தேசிய அளவில் இந்த சம்பவத்தை எடுத்துச் சென்று உச்ச நீதிமன்றத்தை நாடி அதன் வழியாக நடவடிக்கை எடுக்க எடுக்கப் போவதாக தெரிவித்தார்.