முசிறி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா
திருச்சி, அக்.2 திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோயிலில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பூசாரியிடம் சாட்டையில் அடி வாங்கினர். பேய் பிடித்தது அகலவும் , திருமணத்தடை அகலவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் , வேலைவாய்ப்பு கிடைக்கவும் சாட்டையால் பெண்கள் அடி வாங்கினர்.