காந்தி மார்க்கெட்டில் பள்ளத்தில் சிக்கிய பேருந்து – பயணிகள் இறங்கி தள்ளோ தள்ளு!

0 483
Stalin trichy visit

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் இறங்கி தள்ளி சென்றும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6 மணியளவில் துவாக்குடி நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது காந்தி மார்க்கெட் வளைவில் இருந்த பள்ளத்தில் பேருந்தின் முன் சக்கரம் சிக்கியது. தொடர்ந்து ஓட்டுனர் எவ்வளவோ முயற்சித்தும் பேருந்தை எடுக்க முடியாததால் பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட அனைவரும் கீழே இறங்கி பேருந்தை தள்ளி சென்றனர்.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் பேருந்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் காந்தி மார்க்கெட் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும் எனவும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்து சென்றனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.