திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்

0 382
Stalin trichy visit

திருச்சி மார்ச் 21 திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது விக்னேஷ் திருச்சி ரெயில்வே நிர்வாகத்தின் சொந்தமான இடத்தில் உள்ள இரும்புகளை திருட முயன்றதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.அப்பொழுது நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அழைத்து வந்தனர்.

அங்கு, வழக்கமான சோதனையின் போது, விக்னேஷின் உடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஎன தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறை போலீசார் உடனடியாக கே.கே. நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.இந்த சம்பவம் குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷிடம் கஞ்சா வந்தது எப்படி? யார் கொடுத்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், இனி சிறையில் வரும் அனைத்து கைதிகளுக்கும் தீவிர சோதனை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.