இளைஞரிடம் பணம் பறித்த வழக்கு : ஆயுதப்படை இரு காவலர்கள் உள்பட 3 பேர் கைது

0 201
Stalin trichy visit

திருச்சி, ஆக. 18- திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு திருநங்கைக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியாக சென்ற ரோந்து போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததுடன், அந்த இளைஞரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த இளைஞர் அளித்த புகாரின்பேரில் பேரில் விசாரணை மேற்கொள்ள மாநகரக் காவல் ஆணையர் ந.காமினி உத்தரவிட்டிருந்தார். இதில், ஆயுதப்படை காவலர்கள் அசோக்குமார், புண்ணியக்குமார் மற்றும் ஊர்க்கவல் படையைச் சேர்ந்த வீரமணி ஆகிய மூவரும் இளைஞரைத் தாக்கி பணம் பறித்தது தெரியவந்தது.
இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீஸார் வழக்குப் பதிந்து ஆயுதப்படை வீரர்களான அசோக்குமார், புண்ணியக்குமார் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரமணி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆயுதப்படை வீரர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையர் ந.காமினி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரமணியையும் பணியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.