வீட்டிற்குள் புகுந்த 5 அடிநீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

0 289
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர்.

லால்குடி அருகே மணக்கால் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விவசாயம் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் பயத்தில் குடும்பத்தினர் அலரியடித்து வெளியே ஓடி வந்தனர்.இது குறித்து கிருஷ்ணமூர்த்தி லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலைய போக்குவரத்து சுரேஷ், சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் ராஜா, அசோக்,விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.