ஜூன் 1 ஆம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை – வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் : கு.ப.கிருஷ்ணன் பேட்டி

0 140
Stalin trichy visit

திருச்சி, மே 30  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன்  அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்

அப்போது அவர் கூறுகையில்,  தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஜூன் ஒன்றாம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

இந்த மைதானம் முழுக்க நாற்காலிகள் போடப்பட்டு இருக்கிறது வருகின்ற வழிநெடுகிலும் மக்கள் அவரை வரவேற்க இருக்கிறார்கள்

முதல்வர் தனிவிமானத்தில் திருச்சி வருகிறார் பின்னர் நிகழ்ச்சி முடிந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார், தேவையான நேரம்வரை, தேவையான நேரத்திற்கு முதல்வர் திருச்சியில் இருப்பார்

திருச்சியின் அடையாளமான தூய வளனார் கல்லூரி அருகில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம் உள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைக்கோட்டை உள்ளது ஸ்ரீரங்கம் இருக்கிறது இந்த மூன்றும் சங்கமிக்ககூடிய இடத்தில்தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது.  ஜி கார்னர் எங்களுக்கு போதாது என்பதால் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம், இந்தஇடத்தில் பதினைந்தாயிரம் பேர் அமரலாம்

திருச்சி மக்கள் முதல்வரை லட்சோபலட்சம் கரங்களைக் கொண்டு அணைக்க தயாராக இருக்கிறார்கள், முதல்வரும் அவர்களை இருகரம் கொண்டும் அணைக்க தயாராக இருக்கிறார்

தேர்தல் வரும்போது கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது தலைமை முடிவு செய்யும்

கையெடுத்து கும்பிடுகிறோம் தலைவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து வரவேண்டாம் என தமிழக வெற்றிக்கழக தொண்டர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்

தேவை ஏற்படும்போது முதல்வர் பிரஸ்மீட் வைப்பார், விழா மேடையில் முதல்வர் விஜய் அவரது வாகனத்தில் நின்று நன்றி தெரிவிப்பார்  என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.