முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுச்கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, மார்ச் 10 தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் நகர் பகுதி கழகம் சார்பாக ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடைபெற்றது 65 வட்டக் கழக செயலாளர் பன்னீர்செல்வம், 65 அ வட்டக் கழக செயலாளர் சேகர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர் கூட்டத்திற்கு பகுதி கழகச் செயலாளர் G.மணிவேல். தலைமை தாங்கினார்
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை பேராசிரியர் அருணன் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
இறுதியாக கூட்டத்தில் நன்றியுரை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் நன்றியுரை கூறினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன், சபியுல்லா, மாநகர அவைத் தலைவர் நூற்கான் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், மோகன், ராஜ்முகம்மது, பாபு, சிவக்குமார், மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.