திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என கூறுவது வதந்தி: திருமாவளவன் பேட்டி

0 18
Stalin trichy visit

திருச்சி, அக்.17  விலைவாசி உயர்வு தொடர்பாக ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என கூறுவது வதந்தி – திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

சென்னையிலிருந்து திருச்சி வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,  இசையமைப்பாளர் தேவா மரணம் தாங்க முடியாத துயரம். அவரின் இழப்பு கலைத்துறைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைட்டில் சாங்கை உருவாக்கியவர் பாட்ஷா அண்ணாமலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ரஜினிகாந்தின் மதிப்பை மேலும் உயர்த்தியவர்.
அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்வு எளிய மக்களை பாதித்துள்ளது. அரிசி விலை உயர்ந்தால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு மட்டுமல்ல ஒன்றிய அரசின் பொறுப்பும் உள்ளது. இரண்டு அரசுகளும் சேர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வுக்கு குறிப்பிட்ட ஆட்சியாளர்களை மட்டும் குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுகளுக்கு தான் உள்ளது.

தொகுதி மறு வரையறையை திமுக ஏற்கனவே எதிர்த்துள்ளது தற்போது ஒன்றிய அரசு இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தை ஓட்டுவதாக தெரிகிறது மீண்டும் தொகுதி மறுவரை தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டால் திமுக ஏற்கனவே இருந்த நிலைபாட்டில் உறுதியாக இருப்பார்கள் என நம்புகிறோம்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என கூறுவது வதந்தி. ஏற்கனவே இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்பதை தெரிவித்து விட்டேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.