“சிதறுதேங்காய்” உடைக்கும் போராட்டம்: இந்து அமைப்பினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
திருச்சி, டிச.11 மணப்பாறையில் இந்து அமைப்பினர் சிதறு தேங்காய் உடைக்க வந்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்ட தடையை நீக்க கோரி சஷ்டி தினமான நேற்று இந்து அமைப்பினர் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிதறுதேங்காய் உடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர் மணப்பாறை மாரியம்மன் கோவிலில் வந்துள்ளனர். இதனிடையே இவர்கள் வருவதற்கு முன்பாகவே இவர்கள் வருவது அறிந்து காவல்துறையினர் பாதுகாப்புக்கு நின்று இருந்தனர். இதனால் இந்து அமைப்பினர் அருகிலுள்ள நல்லாண்டவர் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு கையில் தேங்காய் எடுத்துக்கொண்டு வந்த போது மணப்பாறை காவல் ஆய்வாளர் அங்கு சென்று தேங்காய் உடைப்பதை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் இந்து அமைப்பினருக்கு இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறு பரபரப்பு ஏற்பட்டது.