டிச.8 முதல் இன்று வரை இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை : திருச்சி விமான நிலைய இயக்குநர் பேட்டி

0 179
Stalin trichy visit

திருச்சி, டிச.10  திருச்சியில் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை – விமான நிலைய இயக்குனர் பேட்டி

இண்டிகோ விமான சேவை தொடர்பாக திருச்சி விமான நிலைய இயக்குனர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் இண்டிகோ விமான நிறுவன பிரச்சனையால் திருச்சி விமான நிலையத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை.
இண்டிகோ நிறுவன சேவையல் பிரச்சினை தொடங்கிய 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 8 ஆம் தேதி முதல் இன்று வரை இண்டிகோ விமான சேவை வழக்கம் போல் இயங்குகிறது. 4 ஆம் தேதி முதல் இன்று வரை 40 விமானங்கள் தாமதமாக புறப்பட்டனர். ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த 2500 பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய பணம் முழுமையாக திருப்பி தரப்பட்டது.
விமானம் ரத்து மற்றும் காலதாமதத்தால் முதல் இரண்டு நாட்கள் மட்டும் பயணிகள் சற்று சிரமமடைந்தனர். அதன் பின் பயணிகளுக்கு முன் கூட்டியே விமானம் இயக்கம் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டது. ரத்த்ய் மற்றும் காலதாமதம் காரணமாக காத்திருந்த பயணிகள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது. இதனால் பயணிகள் பெருமளவில் திருப்தி அடைந்தனர்.

திருச்சி விமான நிலைய புதிய முனையம் அருகே கட்டப்பட்டு வரும் கட்டுப்பாட்டு கோபுரம் உயரம் குறைவாக இருப்பதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் ஏற்கனவே 47 மீட்டருக்கு அது கட்டப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஆறு மீட்டர் உயர்த்தப்பட்டு கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்க பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.