தென்னை வேர் ஊட்டம்: நாளந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்
திருச்சி, ஜன.14 தென்னை வேர் ஊட்டம் குறித்து நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், சிறுதையூர் கிராமத்தில் தென்னை வேர் ஊட்டம் பற்றியும், தென்னை மரத்தில் வண்ணம் பூசுதல் குறித்தும் செய்முறை விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காட்டினார்.
தென்னை மரத்தின் வேர்களுக்கு உரம் அளிப்பது “தென்னை வேர் உரமிடல்” எனப்படும். இது தென்னை மரத்தின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உதவுகிறது.
மரத்தின் அடியில் 1-2 மீட்டர் சுற்றளவில் வேர் பகுதியை கண்டந்து 30-45 செமீ ஆழத்தில் குழிகள் தோண்டவும் (4-6 குழிகள்).
குழிகளில் தேவையான உரங்களை (அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பசுந்தாள் உரம்) இட்டு குழிகளை மண்ணால் மூடவும். உரம் இட்ட பிறகு நன்கு நீர் பாய்க்கவும். மரத்தின் வயது மற்றும் தேவைக்கேற்ப உரம் அளிக்கவும். மழைக்காலம் அல்லது ஈரப்பதம் உள்ள நேரங்களில் உரமிடுவது சிறந்தது. தென்னை மரத்தின் வளர்ச்சிக்கும், விளைச்சலுக்கும் வேர் உரமிடல் மிகவும் முக்கியம்.
இதனை நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம்குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால் முதல்வர் முனைவர். ஜெ.வெங்கட பிரபு, முனைவர் பா.குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப. நந்தகுமார் முதுநிலை உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செய்து முடித்தனர்.