“மாப்ளே…விட்டுடாதே! கைகோத்து ஆளை அமுக்கு” – திருச்சியில் களைகட்டிய மாபெரும் தென்னவர் கபாடி போட்டி!
“மாப்ளே…விட்டுடாதே! கைகோத்து ஆளை அமுக்கு” என்று, கபடிப் போட்டிக்கே உரித்தான கள டிப்ஸ்களுடன் வீரர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டு, உள்ளூர் வர்ணனையார்களுடன் போட்டி களைகட்டியது.தோற்ற அணிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சோர்வோ, வருத்தமோ இல்லாமல் பேசினார்கள். “போட்டியில் ஜெயிக்கிறது தோக்குறது ஒரு விஷயமே இல்லை. கபடியில கலந்துக்கிட்டோம்கிற சந்தக்ஷம்தான் முக்கியம். பரிசைத் தாண்டி, பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் திருச்சியில் விளையாடினர்.
ஆம் திருச்சியில் நடைபெற்ற தென்னவர் கபடி குழு சார்பாக பி.எஸ்.ஆர் டிரஸ்ட் தொகுத்து வழங்க நடத்தப்பட்ட மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நல் ஆசியோடு அனல்பறக்கும் ஆட்டத்தில் வீரர்களும், ஆர்ப்பரிக்கும் கூட்டம் என திருவிழாக் கோலம் பூண்டது அந்த மூன்று நாட்களும்!
திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது. 85 கிலோ எடை கொண்ட இந்த விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசினை தமிழ்நாடு போலீஸ் அணியினர், 2வது பரிசோதனை பி.சி கர்ணா நடுக்காவிரி, 3வது பரிசினை டி.எம்.சி பெருமநாடு அணியினரும், 4வது பரிசினை ஐ.சி.எஃப் சென்னை அணியினர் என பரிசுகளை தட்டிச் சென்றனர்.
இந்த போட்டியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வாசுதேவன் பாஸ்கர், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் ராஜசேகர், ஜமால் முகமது கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் காதர் நிக்கால், சிறப்பு ஒலிம்பிக் தமிழக இயக்குனர் டாக்டர் பிரசன்ன பாலாஜி, ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் மற்றும் பி.எஸ்.ஆர் டிரஸ்ட் நிதி அறங்காவலர் டாக்டர் குணசீலன்,பி.எஸ்.ஆர் டிரஸ்ட் சேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கபாடி போட்டியில் காவல்துறையினர், தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8