மணப்பாறையில் அனுமதியின்றி மணல் எடுத்த டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது!
திருச்சி மணப்பாறை பகுதியில் காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான போலீஸாா் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மணப்பாறை அருகே அகாலிதளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அஞ்சாலிகளம் மாமுண்டி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் எடுத்த வடக்குக் களம் இ. ஜோஸ் பேட்ரிக் ஜெரால்டை (23) கைது செய்து, டிராக்டா் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.