பறவைகள் பூங்கா அமைக்கும் பணி : அமைச்சர் ஆய்வு
திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் குழந்தைக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.