இரவு வரை மக்கள் பணிகளில் ஈடுபடும் கவுன்சிலர் செந்தில்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் கமலா நேரு தெரு, முருகன் கோயில் தெரு, அண்ணா தெரு, போஸ் தெரு, பாரதியார் தெரு,ராஜவீதி, காந்தி சாலை,வ.உ.சி.தெரு ஆகிய பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலையினை இரவு 12,30 மணி வரை இருந்து சீர் செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.
இதேபோல் காட்டூர் மெயின் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் சாக்கடை அடைத்து வீதியில் வழிந்து ஓடுவதை உடனடியாக தூய்மை செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேற்கொண்டார்.