மாபெரும் கிரிக்கெட் போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜுன் 26 முத்ததமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு மாநகர கழகத்தன் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதில் திருச்சி கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட 72 வார்டுகளின் சார்பில் தலா ஒரு அணி போட்டியில் பங்கேற்றது. அனைத்து அணிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.